கெடா மாநில மஇகா மகளிர் அணியின் துணைத் தலைவியாக திருமதி.விக்னேஸ்வரிசுரேஷ் அரிமான் அவர்கள் நியமனம் ஆனார்.
இவர் கெடா மாநிலத்தின் மிக அதிக ம.இ.கா கிளைகளைக் கொண்ட மெர்போக் தொகுதியின் முன்னால் தலைவரும் இன்னாள் நிரந்தரத் தலைவரும் ஆன திரு.ஆறுமுகம் அரிமான் மகள் தான் இவர்.
தன் தந்தையுடன் 18 வயதில் இருந்தே அரசியல் பயணத்தை தொடர்ந்தவர். கடார மண்ணில் மெர்போக் தொகுதி என்றாலே துன் சாமிவேலு ஐயா காலத்திலிருந்தே பெரும் பரபரப்பைக் கொண்ட தொகுதியாகத் தான் இருக்கும்.
இதற்கான அடையாளம் தான் மெர்போக் தொகுதியில் அமைந்துள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்க விக்னேஸ்வரியின் தந்தை ஆறுமுகம் அரிமான் அவர்களின் பங்களிப்பும் அளப்பரியா ஒன்றாகும்.
விக்னேஸ்வரி @ விக்கிசுரேஷ் அரிமான் முன்னாள் ம.இ.கா தேசிய புத்ரி செயலாளராகவும் கெடா மாநில ம.இ.கா புத்ரி தலைவியாகவும் செயலாற்றி இருக்கிறார். பல மாநில தலைவர்களின் பாரட்டையும் பெற்றவர். 4 ம.இ.கா தேசிய தலைவர்களுடன் தன் அரசியல் களத்தை சந்தித்தவர் திருமதி. விக்னேஸ்வரி.
அவர் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து பல மாநில ம.இ.கா தலைவர்கள் மற்றும் பிற கட்சியின் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். படிக்கும் பிள்ளைகளுக்கு இலவச மடிக்கணினி, தனித்து வாழும் தாய்மார்களுக்கு இலவச தையல் இயந்திரம், வியாபார பொருட்கள், B40 குடும்பங்களுக்கு தீபாவளி உடைகள், சமையல் பொருட்கள் போன்ற அதிக சேவைகளை செய்து இருக்கின்றார்.
விக்கிசுரேஷ் அரிமான் போன்ற துடிப்புமிக்க ஆக்கப்பூர்வமான மகளிர் தலைவிகளை நியமனம் செய்த நம் கட்சியின் ஆசான் Tan Sri SA.VIGNESWARAN, ம.இ.கா தேசிய பொதுச் செயலாளர் Dato Dr’S.Ananthan மற்றும் தேசிய ம.இ.கா மகளிர் அணியின் தலைவி YB சரஸ்வதி நல்லதம்பி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ம.இ.கா கட்சியில் மேலும் ஆர்வமிக்க இளைய சந்ததிகளுக்கு ஊக்கம் அளித்து, அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி கட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என தாழ்மையோடு கேட்டுக் கொள்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
இப்படிக்கு,
செப்பூத்தே S.S. இராமமூர்தி