புத்ராஜெயா: ஆக 13-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரமலான் ஹருண் இன்று அறிவித்தார்.
ஜொகூரில் உள்ள மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினரான அம்னோவின் ஷரீபா அசிசா கடந்த ஆகஸ்ட் 2 அன்று காலமானார். இதனை தொடர்ந்து அத்தொகுதி காலியானது.
இந்நிலையில் அத்தொகுதிக்கான தேர்தல் தேதியை முடிவு செய்யும் நோக்கில் தேர்தல் ஆணையம் இன்று கூடியது.மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.அதே வேளையில் செப்டம்பர் 24ஆம் தேதி முக்கூட்டியே வாக்களிக்கப்படும்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில்,
தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஷரிபா, 5,166 பெரும்பான்மையுடன் தொகுதியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bernama