வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு!

வாஷிங்டன்: தனக்கு எதிராக சதி அமெரிக்கா சதி என்ற ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப்பணியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் முடிவை எதிர்த்தும், ஹசீனா பதவி விலகக் கோரியும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் இப்போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், 450க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அசாதாரண சூழலை தொடர்ந்து ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பேற்றது. இதனிடையே இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேற அமெரிக்காவே காரணம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தனக்கு எதிராக சதி அமெரிக்கா சதி என்ற ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்; எங்களுக்கும் வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள்தான் காரணம் என சொல்வது முற்றிலும் பொய். இவ்வாறு அவர் கூறினார்.

reuters

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles