கோலாலம்பூர் ஆக 13-
வங்களாதேசத்தில் இந்து சமூகம் அனுபவித்து வரும் துன்பங்களை கண்டிக்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.
மாறாக அமைதியாக இருக்கக்கூடாது. நீதி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஒரு தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் களம் இறங்க வேண்டும்.
வங்களாதேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மை மக்களை அடித்து துன்புறுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி வலியுறுத்தும் தார்மீகப் பொறுப்பு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உள்ளது என்று மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் புனிதன் தெரிவித்தார்.
சிறுபான்மை மக்கள் நீண்டகாலமாக வன்முறைத் தாக்குதல்களுக்கு பலியாகி வருவதை நாம் பார்த்து கொண்டிருக்க முடியாது
வங்களாதேசத்தில் நிகழும் கொடுமைகள் உலக மக்கள் மத்தியில் பெரும் சினத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் குரல்கள் அடிக்கடி கேட்கப்படாமல் போகும் உலகில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது இன்றியமையாதது. .
ஆனால் பிரதமர் இந்த விவகாரத்தில் இன்னமும் மௌனமாக இருப்பது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்
மலேசியா, அதன் பன்முக கலாச்சார மற்றும் பல மத அடையாளத்தில் தன்னைப் பெருமைப்படுத்தும் ஒரு தேசமாக, உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம், அன்வார் இப்ராஹிம் வங்காளதேச இந்துக்களின் அவலநிலைக்கு சர்வதேச கவனத்தைக் கொண்டுவர உதவுவதோடு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க மற்ற உலகத் தலைவர்களையும் சர்வதேச அமைப்புகளையும் வலியுறுத்தலாம்.
ஆகவே வங்களா தேசத்தில் சிறுபான்மை மக்களை அடித்து துன்புறுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன் வர வேண்டும் என்று
*மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் எஸ்.பி. புனிதன் கேட்டுக் கொண்டுள்ளார்.