கிள்ளான்-அக் 14,
இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் நடத்தப்படும் வன்முறையை அடக்க மலேசியா வங்களாதேசத்திற்கு அழுத்தம் தர வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஹின்ராப் போராளியுமான வீ.கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.
நாளுக்கு நாள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அங்கு வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்களான இந்துக்கள்,கிருஷ்தவர்கள் மற்றும் புத்த சமயத்தினர் பாதிக்கப்பட்டு வருவதை பல ஊடங்கள் மூலமாக தெரியவருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மையனரின் உரிமைகள்,உடைமைகள் ,மதம் மற்றும் கலை கலாச்சாரத்தை கட்டாயமாக பாதுகாக்க வேண்டும் என்பது அனைத்து நாடுகளில் உள்ள உடன்படிக்கையாகும் என்பதினை வங்காளதேசம் மறந்து விட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்துக்களும் அவர்களின் மத நம்பிக்கைகளும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதை காணும் போது கவலையளிக்கின்றது,அதை தடுத்து நிறுத்த வேண்டிய அந்நாட்டு தற்காலிக அரசாங்கமும் இராணுவமும் கையைக்கட்டி வேடிக்கைப் பார்க்கின்றது என்று அறியும் போது உலக இந்துக்கள் வேதனையும் சோகமும் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எதற்காகவோ தொடங்கப்பட்ட மக்கள் புரட்சி இன்று வேறு திசையில் மதம் என்னும் வழியில் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு தன் வன்மத்தை கக்கிக்கொண்டுருக்கின்றது என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.
ஓர் ஆலய உடைப்பில் இருந்து தொடங்கப்பட்ட என் பயணம் பின்னாளில் இந்தியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிய போது என் பயணம் இந்நாட்டு இந்தியர்களுக்கான போராட்டமாக மாறியது அனைவரும் அறிந்ததே ஆக மனித நேயத்தை காப்பவனாக,சிறுபான்மையினரின் உரிமைக்கு குரல் கொடுப்பவனாக என் குரல் என்றும் ஒலிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அங்கு அதிகரித்து வரும் வன்முறையை கண்டிக்கும் விதமாக மலேசியா அரசாங்கத்தை தாம் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.