காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வம்
கோல குபு பாரு, ஆகஸ்ட்.14-
கோல குபு பாரு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தீர்வு காணுமா என்று டத்தோ கலைவாணர் கேள்வியை முன் வைத்துள்ளார்.
இந்த மார்க்கெட் மறுசீரமைக்கப்பட்டும் முறையாக பராமரிக்கப்படவில்லை என அங்குள்ள வியாபாரிகள் சிலர் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் அளித்த புகாரின் காரணமாக இன்று காலை 9.00 மணி அளவில் உலு சிலாங்கூர் கோலா குபு பாரு பொதுச் சந்தையை பார்வையிட்ட நம்பிக்கை இயக்கத்தின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் அச்சந்தை முறையாக பராமரிக்கப்படதையும் அங்கு நிறைய பிரச்சினைகள் இருப்பதையும் உறுதி செய்தார்.
புதியதாக சீரமைக்கப்பட்ட சந்தையில் கழிவுகள் வெளியாகி வருகின்றன.
கால்வாய்கள் மூடப்படாதது, மின்சார பெட்டிகள் முறையாக மூடப்படாதது, பாதுகாப்பற்ற வகையில் மின்சார கம்பிகள், கால்வாய்களில் நீர் தேக்கம், அசுத்தமற்ற கழிவறைகள் போன்ற பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
லட்சக்கணக்கில் செலவு செய்து மறுசீரமைப்பு செய்யப்பட்ட மார்க்கெட்டை இப்படியா முறையாக பராமரிக்காமல் இருப்பது என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல் அங்கு வரும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது.
நகராண்மைக் கழகம் என்ன செய்கிறது. உடனடியாக இதற்கு தீர்வுக்கானப்பட வேண்டும் என டத்தோ கலைவாணர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இச்சந்தையில் தலைமுறை தலைமுறையாக கடந்த 75 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் யாப் தோங் பஹா எனும் கொழி இறைச்சி வியாபாரிக்கு பன்றி இறைச்சி விற்பனை செய்யும் பகுதிக்கு பக்கத்தில் வியாபாரம் செய்வதற்கான இடம் வழங்கப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சி விற்பனை செய்யும் இடத்தில் கோழி இறைச்சி வியாபாரம் செய்தால் எப்படி முஸ்லிம் மக்கள் அவரிடம் வாங்குவதற்கு முன் வருவார்கள் என்று அவர் கேட்டார்.
இது அவரின் வியாபாரத்தை முடக்குவதற்கான சதித்திட்டம் போல் தோன்றுகிறது என அவர் கூறினார்.
இதன் தொடர்பாக சம்பந்தப்பட்ட வியாபாரி பல முறை உலூ சிலாங்கூர் நகராண்மைக் கழகத்திடம் முறையிட்டும் அவருக்கு நியாயம் கிடைக்கப்படவில்லை.
தற்பொழுது அந்த வியாபாரிக்கு பெரிதளவில் வியாபார பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. தற்காலிகமாக அவர் சந்தைக்கு வெளிப்புறத்தில் தனது கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகிறார் என்று அவர் சொன்னார்.