காஜாங், ஆக 14-
உலு லங்காட் மாவட்டத்தில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளிக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்க உதவுங்கள் என்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பள்ளி தலைமை ஆசிரியை
திருமதி கெங்கம்மாள் முனுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது
346 மாணவர்கள் பயிலும் வேளையில் 48
ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகவும் செம்மை யாகவும் இருக்க டிஜிட்டல் நூலகம் தேவைப்படுகிறது.
அந்த வகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்க சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று அவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.
டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு போதுமான இடவசதியும் இருப்பதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இன்று காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கெங்கம்மாள் முன் வைத்த கோரிக்கையை பரீசிலிப்பதாக பாப்பா ராயுடு தமது உரையில் குறிப்பிட்டார்.
பள்ளி வாரியத் தலைவர்
சி. நாதன்,
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெ. ஜெயகாந்தன், துணை தலைமை ஆசிரியர்கள்
ஐ.சாரதி
கி.கோபிநாத்
இரா. யுவனேஸ்வரி உட்பட இதர ஆசியர்களும் மாணவர்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.