காஜாங், ஆக 14-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகள் 50 லட்சம் வெள்ளி மானியத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2008 சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளி களுக்கு மானியம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகள் இந்த மானியத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் அரசு அனைத்து மொழி பள்ளிகளுக்கும் பாராபட்சம் இன்றி மானியம் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.
எந்த பள்ளியும் புறக்கணிக்கப் படவில்லை. அந்த வகையில் இவ்வாண்டும் 50 லட்சம் வெள்ளி தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் 70 விழுக்காடு பள்ளி அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டிற்கு பயன் படுத்த வேண்டும்.
மீதமுள்ள 30 விழுக்காடு மானியம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பயன் படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று காலையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.