



காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வம்
கோலாலம்பூர் ஆக 15-
வங்களாதேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை தாக்குதல்களை கண்டித்து இன்று கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள மலேசியாவுக்கான வங்களாதேச தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கில் திரண்ட மலேசிய இந்தியர்கள் தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.
கடந்த சில தினங்களாக வங்காளதேசத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் மிகக் கடுமையாக தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அரங்கேறியது.
அதிகாரத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்ட தீவிரவாத கும்பல்கள் இந்த தாக்குதலை நடத்தின.
மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தீவிரவாத கும்பல்கள் நடத்திய மிக மோசமான தாக்குதல்களை கண்டிக்கும் வண்ணம் இன்று மலேசிய இந்தியர்கள் வங்காளதேச தூரத்தில் முன் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய குருக்கள் சங்கத்தின் தலைவர் பிரகாலாதான் குருக்கள், அம்பாங் ஆதி சங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் மகேந்திர குருக்கள் , உரிமை கட்சியை சேர்ந்த செகு சேகர், ராஜரத்தினம், பினாங்கு மதியழகன், இந்து தர்ம மாமன்ற பொறுப்பாளர்கள், மாக் மண்டின் குமார், மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சுப்பிரமணியம், கலை முகிலன், டத்தோ கலைவாணர், டாக்டர் ஸ்ரீராம் உட்பட பலரும் கலந்து கொண்டு தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினார்.