புதுடில்லி: . செங்கோட்டையில் இன்று (ஆகஸ்ட் 15) 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11ம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.
முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்! என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, அவர் டில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.