கோலாலம்பூர்:
மலேசிய, இந்தியா கூட்டமைப்பில் அதிகமான கலை, கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ இரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம், பாரத கொண்டாட்டம் நிறைந்த வாரத்தில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் குரு டாக்டர் கஜேந்திர பாண்டாவின் ஸ்வர்ன சமரோஹா எனும் கலை கலாச்சார நடன படைப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு என்னை அழைத்த இந்திய தூதரகத்திற்கு தூதர் பிஎன் ரெட்டிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற கலை, கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகள் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது. இதற்கு ஓர் உதாரணம் நம் நாட்டைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் டத்தோ ரம்லி இப்ராஹிமிற்கு இந்தியாவில் உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இது தான் நமது பாரம்பரிய கலைகளில் உள்ள மகத்துவமாகும்.ஆக மலேசிய, இந்தியா கூட்டமைப்பில் அதிகமான கலை, கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.