
கோலாலம்பூர், ஆக. 18-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். இரமணன் நம்பிக்கையை தெரிவித்தார்.
பிரதமர் அன்வாருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நிலவி வரும் அணுக்கமான நட்பின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.