கோலாலம்பூர் ஆக 17- ஹிப்போப் தமிழா இசை நிகழ்ச்சியில் நடந்தது தான் மிகப் பெரிய டிக்கெட் விற்பனை மோசடியாகும். இந்த தவறுகளுக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிட்டி புரோடக்சன்ஸ் நிறுவனத்தில் ரிஷி, கோவிந்த் ஆகியோர் கூறினார்.
ஹிப் போப் தமிழா இசை நிகழ்ச்சி அண்மையில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளு விற்று முடிக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சியில் இருந்த நாங்கள் இசை நிகழ்ச்சியின் போது நடந்த டிக்கெட் மோசடி சம்பங்கள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்களுக்கு தெரிந்து 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த டிக்கெட் மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டு விட்டோம். அதே வேளையில் மக்கள் இதுபோன்ற டிக்கெட் விற்பனை மோசடியில் சிக்கி ஏமாறக் கூடாது. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று அவர்கள் கூறினர்.