கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை: ஆக 18-
கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி-எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திரையுலக பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles