ஜொகூர்பாரு: ஆக 19-
டத்தோ சிவராஜின் விண்ணப்பத்தை மஇகா மத்திய செயலவை பரிசீலிக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ சிவராஜ் கடந்தாண்டு கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கட்சியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.அவரின் விண்ணப்பத்தை மஇகா மத்திய செயலவை பரிசீலித்து உரிய முடிவை எடுக்கும் என்றுஜொகூர் மாநில மஇகா மாநாட்டை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
இதனிடையேஜொகூர் மாநில மஇகா மாநாட்டில் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டது இங்கு கட்சி இன்னும் வலுவாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
இந்நிலை தொடர வேண்டும். ஜொகூர் மாநிலத்தில் சட்டமன்றங்களைத் தவிர்த்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மஇகா வெற்றி பெற வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை ஜொகூர் மாநில மஇகா மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.