![](https://thinathanthi.my/wp-content/uploads/2024/08/mk-5.jpg)
பிறை ஆக 19-
சுதந்திர மாதக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் தேசியக்கொடிகளை பறக்க விடும் பிரச்சாரத்தை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
பிறை எம்பிபிகே சார்பில் சுற்று வட்டார
மக்களுக்கும் இலவசமாக ஜாலோர் ஜெமிலாங் கொடிகள் வழங்கப்பட்டது.
பிறை சோங் வா சீனப் பள்ளி எதிர்புறத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிறை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டத்தோஸ்ரீ ராஜூ பொதுமக்கள் தேசியக் கொடிகளை பறக்க விடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திர தினத்தையும் செப்டம்பர் 16ஆம் தேதி மலேசிய தினத்தையும் நாம் கொண்டாட உள்ளோம்.
இவ்விரு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களாகிய நாம் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும்.இதன் மூலம் நமது தேசப் பற்றை வெளிப்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
இந்நோக்கத்தின் அடிப்படையில் பிறை மக்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், தொகுதி மக்கள் அனைவரும் தேசியக் கொடியை பரவலாகப் பறக்க விடுவார்கள் என எதிர்பார்த்ததாக அவர் சொன்னார்.
ஒவ்வொரு வளாகத்திலும் வீட்டிலும் மலேசியக் கொடியைப் பறக்கவிடுவதை ஊக்குவிக்கும் முயற்சியில் பிறை சட்டமன்ற தொகுதி களம் இறங்கி இருப்பதாக பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கவுன்சிலர் பொன்னுதுரை உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.