சுங்கை பட்டாணி ஆக 19 கிளந்தான் மாநில “நெங்கிரி” சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றியானது அந்த மாநில மக்கள் ஒற்றுமை அரசை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று கெடா தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ டி ராஜா மகாதீர் காலிட் கூறினார்.
நேற்று இங்குள்ள காந்தி மண்டபத்தின் நிகழ்ந்த கெடா மாநில மைபிபிபி கட்சியின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.,
இளைஞர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களித்திருப்பது எதிர்கட்சியினரை அவர்கள் புறக்ககணிக்கத் தொடங்கி விட்டனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. மடானி அரசாங்கம் செய்த மாற்றங்கள் இளம் வாக்களர்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே கடந்த காலங்களில் மைபிபிபி கட்சியுடன் இருந்த நட்பு உறவை தொடர்ந்து அதை வலுப்படுத்துவதாக அவர் உறுதியளித்தார்.
“போட்டியில் இருந்து பின்வாங்காமல் மீண்டும் ஆட்சியை திரும்பப் பெறுவதற்கு வாக்காளர்களின் இதயங்களை வெல்ல நாம் ஒன்றிணைந்து செல்லத்தான் வேண்டும். அடுத்தப் பொதுத் தேர்தலில் வெற்றியின் மூலம்தான் இந்த நெருங்கிய உறவை உணர முடியும். நமது நாடு பல்வேறு இனங்களால் ஆனது, இந்த அன்புக்குரிய நாட்டில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த உரிமைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் டத்தோ மாகாதீர் காலிட்டுக்கு கெடா மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் மணிவாகசம் சிறப்பு செய்தார்.
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கெடா மாநில மைபிபிபி கட்சியின் உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது