கால்வாயில் இரு பெண்களின் உடல்கள் கண்டுபிடிப்பு- அலோர்ஸ்டாரில் சம்பவம்!

அலோர் ஸ்டார், ஆக 20 – இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலிம் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றின் பின்புறம் உள்ள கால்வாயில் இரு பெண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

நெருங்கிய குடும்ப உறவைக் கொண்டவர்கள் என நம்பப்படும் அப்பெண்களின் உடல்கள் கால்வாயில் தலைகுப்புறக் கிடக்கக் காணப்பட்டன. ஒருவரின் உடலில் கடுமையான காயங்களும் கண்டுபிடிக்கபட்டன.

சம்பவ இடத்தில் கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவினரும் மோப்ப நாய்ப் பிரிவினரும் (கே-9) தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட அவ்விரு பெண்களின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக அலோர்ஸ்டார், சுல்தானா பாஹ்யா மருத்துவனைக்கு அனுப்பப்பட்டன.

இதனிடையே, இரு பெண்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சித்தி நோர் சலாவத்தி சஹாட், இச்சம்பவம் தொடர்பான விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles