கூச்சிங், ஆக 20-
சரவாக் மாநிலத்தில் கூச்சிங் நகரில் நடைபெற்று வரும் சுக்மா போட்டியில் சிலாங்கூரை சேர்ந்த இளம் வீரர் சர்வேஸா முரளி தங்கப்பதக்கம் வென்றார்.
சுக்மா சிலம்ப போட்டியில் சிலம்பத்திற்கு மொத்தம் 14 தங்கம் 14 வெள்ளி மற்றும் 28 வெண்கலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சுக்மா சிலம்பம் தனிநபர் பிரிவில் களம் இறங்கிய இவர் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூர் மாநிலத்திற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
உலு சிலாங்கூர் பத்தாங் காலி சிலம்ப கிளப்பை சேர்ந்த இவர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது.
இந்த பிரிவில் பேராக் மாநில வீரர் சர்வேஸ் நாகராஜன் வெள்ளியும் விலாயா வீரர் நிவாஸ் வெண்கலமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற சிலம்ப வீரர்களுக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயூடு மற்றும் மலேசிய சிலம்பக் கழகத் தலைவர் டாக்டர் சுரேஷ் ஆகியோர் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்..