போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இணைந்திருக்கும் ரொனால்டோ, தற்போது புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
அதற்கு யூஆர் கிறிஸ்டியானோ என அவர் பெயரிட்டுள்ளார். அவரது சேனலை தற்போதுவரை 5.1 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
ரொனால்டோ இந்த சேனலை தொடங்கிய முதல் 90 நிமிடங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பதிவு செய்தனர்.
அவரது முதல் வீடியோவை வெளியிட்ட சில மணிநேரங்களில் 1.69 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்தனர்.
இதன் மூலம் யூடியூப் உலகில் புதிய சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.