நமது பாரம்பரிய தொழில்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.
ஒரு காலக்கட்டத்தில் முடி வெட்டுவது, சலவை உட்பட பல தொழில்கள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது
ஆனால் இப்போது இத்தொழில்களில் பல மற்ற சமூகத்தினர் ஆக்கிரமித்து விட்டனர்.குறிப்பாக அவர்கள் நவீனத்துடன் அத்தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலை மாற வேண்டும். நமது பாரம்பரிய தொழில்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
அவ்வகையில் தாஸ் முடித் திருத்தும் அகாடமி மஇகா இளைஞர், புத்ரா பிரிவுடன் இணைந்து முடி திருத்தும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.
அடுத்த 96 மணி நேரத்திற்கு இடைவிடாமல் அவர்கள் முடி வெட்டவுள்ளனர்.
மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடிப்பது இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
அதே வேளையில் இத்துறையில் அதிகமாக இளைஞர்கள் கால்பதிப்பதற்கு ஊக்குவிக்கிறது.
ஆக இம்முயற்சியில் இறங்கியுள்ள தாஸ் அகாடமி உட்பட அனைத்து தரப்பினருக்கும் எனது வாழ்த்துகள்.
மேலும் மஇகா இளைஞர், புத்ரா இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இது இளைஞர்களை நல்வழிப்படுத்துவதுடன் ஒன்றிணைக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.