சென்னை:
சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அக்கட்சித் தலைவா் விஜய் வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு அறிமுகம் செய்து, கொடியேற்றினார்.
சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.