கூச்சிங் ஆக 23-
சரவாக் கூச்சிங் நகரில் நடைபெற்ற சுக்மா சிலம்பப் போட்டியில் பேராக் மாநிலம் ஒட்டுமொத்தமாக ஆறு தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்ததாக மலேசிய சிலம்ப கழகத்தின் தேசிய தலைவர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற சுக்மா சிலம்பப் போட்டியில் 14 மாநில விளையாட்டளர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 14 தங்கம் 14 வெள்ளி மற்றும் 23 வெண்கலப்பதக்கங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் பேராக் மாநிலம் 6 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலம் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
பினாங்கு மாநிலம் 3 தங்கம் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலத்தை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
சிலாங்கூர் மாநிலம் 3 தங்கம் மற்றும் 4 வெண்கலத்தை வென்று 3 ஆம் இடத்தைப் பிடித்தது.
விலாயா மாநிலம் 1 தங்கம் 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலத்தை வென்று 4 ஆவது இடத்தை பிடித்தது.
கெடா மாநிலம் 1 தங்கம் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்தை வென்றது.
திரெங்கானு 2 வெள்ளி, 3 வெண்கலம், சரவாக் 2 வெள்ளி 1 வெண்கலம், சபா 1 வெள்ளி 1 வெண்கலம், நெகிரி செம்பிலான் 1 வெள்ளி, மலாக்கா 3 வெண்கலம், பெர்லிஸ், ஜொகூர், கிளாந்தான் தலா ஒரு வெண்கலத்தை வென்றது.
இம்முறை பகாங் மாநிலம் எந்த ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சுக்மா போட்டியில் மீண்டும் சிலம்பம் இடம் பெற்றது பெரு மகிழ்ச்சியை தருகிறது என்று டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
போட்டியை காண சிறப்பு வருகை புரிந்த சிலாங்கூர் ராஜா மூடா, இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
சுக்மா போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து சிலம்ப விளையாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.