ஈப்போ, ஆக.23: வரும் ஞாயிற்றுக்கிழமை 25 ல், தமிழ்நாட்டின் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மாநாடாகும். இம்மாநாட்டில் ஈப்போவிலிருந்து 29 பேர் அடங் கிய முருக பக்தர்களுடன் பழனிக்கு செல்வதாக மகப்பேறு மருத்துவரும் முருகன் பக்தி இயக்க தலைவருமாகிய மருத்துவர் வ. ஜெயபாலன் கூறினார்.
இம்மாநாடு அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன், இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள அயல்நாடுகளிலிருந்து சுமார் 15 ஆயிரம் பேராளர்கள் கலந்துக்கொள்வதாக எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாதிரியான மாநாடு பல முறை நடந்தபோதிலும் இம்முறைதான் தமிழ்நாட்டு அரசுவால் அங்கீகாரம் கிடைக்கப்பெற்று நடைபெறுகிறது. ஆகையால், பேராளர்களுக்கு தங்கும்விடுதிகள், உணவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் தமிழ்நாட்டு அரசாங் கம் இலவசமாக வழங்குவதற்கு அவர் மலேசிய பேராளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இம்மாநாட்டில் முருக தொண்டர்களுக்கு 16 பிரிவில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்களில் மலேசிய மண்ணின் மைந்தன் ஈப்போவை சேர்ந்த மருத்துர் வ.ஜெயபாலனுக்கு ” இந்துபுராணக் கச்சியப்பர் விருது ” வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.