கோலாலம்பூர் ஆக 24-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்துச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
நாட்டில் புகழ்பெற்ற விக்டோரியா இடைநிலைப் பள்ளி திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் விலாயா மாநிலத்தைச் சேர்ந்த 15 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்றன.
செராஸ் தமிழ்ப் பள்ளி, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் தமிழ்ப் பள்ளி, செந்தூல் தம்புசாமி தமிழ்ப் பள்ளி, செந்தூல் அரசினர் தமிழ்ப் பள்ளி, சுங்கை பீசி தமிழ்ப் பள்ளி, பிளேட்சர் தமிழ்ப் பள்ளி, சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி, சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, எடின்பெர்க் தமிழ்ப் பள்ளி, புக்கிட் ஹாலில் தமிழ்ப் பள்ளி, அப்பர் தமிழ்ப் பள்ளி,பங்சார் தமிழ்ப் பள்ளி, கம்போங் பண்டான் தமிழ்ப் பள்ளி, சன்பெங் தமிழ்ப் பள்ளி,செந்தூல் செயிண்ட் ஜோசப் தமிழ்ப் பள்ளி ஆகியவை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தன.
இதில் பெண்கள் பிரிவில் 8 தமிழ்ப் பள்ளி குழுக்களும் பங்கேற்று அசத்தின.
மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டி மோகன் இந்த கால்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீபா துணை தலைவர் துவான் ஏஎஸ்பி இராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியை காண அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை புரிந்தது மிகவும் பாராட்டுக்குரியது