கோலாலம்பூர் ஆக 24-
நாட்டில் கால்பந்து துறையில் கோட்டா முறை ஓழிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் கால்பந்து துறை மேம்படும் என்று சுக்கிம் எனப்படும் Sukan India Malaysia தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்
ஒரு காலத்தில் கால்பந்து குழுவில் ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது மூன்று அல்லது நான்கு இந்தியர்கள் இருப்பார்கள்.
அதேபோல் மலாய் மற்றும் சீனர் கால்பந்து வீரர்களும் இடம் பெற்றிருப்பார்கள்.
ஆனால் இப்போது கோட்டா அடிப்படையில் ஒரு அல்லது இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே குழுவில் இடம் பெற்றுள்ளது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
முதலில் இந்த கோட்டா முறை ஓழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கால்பந்துத்துறை மேம்பாடு காணும் என்று அவர் சொன்னார்.
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று விக்டோரியா இடைநிலைப் பள்ளி திடலில் மிகப்பெரிய அளவில் விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.