கோலா குபு பாரு தொகுதியில் 112 எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது!

கோலகுபு பாரு ஆகஸ்ட் 25-
கோலா குபு பாரு தொகுதியில் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்து விளங்கிய 112 மாணவர்களுக்கு மொத்தம் RM24,050 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்த ஊக்கத்தொகை 5A மற்றும் அதற்கு மேற்பட்ட தேர்வு முடிவுகளைப் பெற்ற 106 எஸ்பிஎம் மாணவர்களுக்கும் மீதமுள்ள 4A மற்றும் 3.75 சராசரி புள்ளியை பெற்ற ஆறு எஸ்டிபிஎம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது என பாங் சோக் தாவ் கூறினார்.

மேலும், எஸ்பிஎம் மாணவர்களுக்கு RM100 (5A), RM150 (6A), RM200 (7A), RM250 (8A), RM300 (9A) மற்றும் 10A மற்றும் அதற்கு மேல் RM350 வழங்கப்பட்டது என அவர் கூறினார்.

“106 எஸ்பிஎம் மாணவர்களுக்கு மொத்தம் RM21,650 வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மீதத் தொகை RM2,400 ஆறு எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மொத்த வெகுமதித் தொகை RM24,050 ஆனது” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles