லண்டன், ஆக 25-
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.
பால்மர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பிரைட்டன் கிளப்பை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டது .
மென்செஸ்டர் யுனைடெட் இத்தோல்வி அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் அர்செனல்2-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லாவை அதன் அரங்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது..
மென்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் வீழ்த்தி வெற்றி பெற்றது..
டோட்டன்ஹாம் 4-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டனை வீழ்த்தியது.