மா பவளச்செல்வன்
கோலாலம்பூர்:
பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் விஜயலட்சுமியை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் இன்று தெரிவித்தார்.
இதன் மூலம் விரைவில் விஜயலட்சுமியின் நிலை கண்டறியப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடைபாதை சரிந்து விழுந்த சம்பவத்தில் விஜயலட்சுமி பரிதாபமாக புதையுண்டார்.அவர் கழிவு நீர் குழாய்களில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.இதன் அடிப்படையில் அக்குழாய்களில் தேடும் பணி தொடர்கிறது.
குறிப்பாக அக் குழாயின் அனைத்து கழிவுகளும் பந்தாய் டாலாம் கழிவு நீர் மையத்திற்கு தான் வந்து சேரும்.இதன் அடிப்படையில் கடந்த 5 நாட்களாக இங்கு தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த மையம் பந்தாய் டாலாம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளது. இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டேன்.இங்குள்ள அதிகாரிகள் எனக்கு முழு விளக்கத்தையும் தந்தனர் என்று அவர் சொன்னார்.