இல்லாத நெடுஞ்சாலைத் திட்டத்தில் 5.5 மில்லியன் ஏமாற்றியதாக டத்தோவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள்!

ஷா ஆலம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத நெடுஞ்சாலைத் திட்டம் மற்றும் விற்பனை, சேவை வரி (SST) செலுத்துவதற்கு வசதியாக பாஸ்கரன் கண்ணன் மற்றும் சோமசுந்தரம் குமார் ஆகிய இருவரிடம் 5.5 மில்லியன் பணத்தை மோசடி செய்ததாக டத்தோவுக்கு எதிராக இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது.

ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Awang Kerisnada Awang Mahmud. முன்னிலையில் 50 வயதான Datuk Mohamad Feardaus Khairuddin வயது 50 மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டது

மேலும் தலா RM3.7 மில்லியன் மற்றும் RM1.3 மில்லியன் பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி அவர் தூண்டியுள்ளார்.

Lebuhraya Padang Besar-Bukit Kayu Hitam-Jitra-Padang Terap-Teloi-Kulim-Changkat Jering, அல்லது “Northern Ekspress Alternative Road” என்ற பெயரில் இல்லாத நெடுஞ்சாலைத் திட்டத்தை வடிவமைத்தல், கட்டுதல் மற்றும் நிறைவு செய்தல் ஆகியவற்றுக்கான பணிகளை வழங்குவதற்காக இந்தப் பணம் கொடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் நவம்பர் 4 மற்றும் 9, 2022 க்கு இடையில், காஜாங்கின் செரி கெம்பாங்கனில் உள்ள மைன்ஸ் ரிசார்ட் சிட்டியில் உள்ள ஒரு வளாகத்தில் இந்த குற்றங்களைச் செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது

மூன்றாவது குற்றச்சாட்டில், திட்டத்துடன் இணைக்கப்பட்ட SST கட்டணத்திற்காக RM500,000 பணத்தை வழங்குவதற்காக இரண்டாவது பாதிக்கப்பட்டவரை ஏமாற்றியதாக ஃபியார்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி கஜாங்கில் உள்ள கன்ட்ரி ஹைட்ஸ் வங்கியில் அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் கட்டமைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளும் ஒரு வருடத்திற்கு குறையாத மற்றும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க சட்டம் வகை செய்கிறது.

டிபிபி ஐடா கைருலீன் அஸ்லி தமது வாதத்தில் ஒரு உத்தரவாதத்துடன் RM80,000 ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

இதைத் தணிக்கும் வகையில், வழக்கறிஞர் ஆர்.எல்.பன்னீர் செல்வன் தமது கட்சிக்காரருக்கு ரிம40,000 ஜாமீன் கேட்டு மனு செய்தார்.

அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத் துறையில் இருக்கிறார், அவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஆறு குழந்தைகள் உள்ளனர், அவரே ஒரே வருமானம் ஈட்டுபவர்.

“அவரது மனைவிகளில் ஒருவர் ஜாமீன் கொடுப்பார். நான் நியாயமான தொகையைக் கேட்கிறேன்.அவரிடம் பாஸ்போர்ட் இல்லை, பழையது காலாவதியாகிவிட்டதால் புதுப்பிக்கப்படவில்லை,என்று அவர் கூறினார்.

பின்னர் அவருக்கு நீதிபதி அவாங் ஒரு உத்தரவாதத்துடன் RM50,000 ஜாமீன் வழங்கினார்.சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பினர் மூலமாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு உத்தரவிட்டார்.

டத்தோ பிர்டாவூஸின் கடவுச்சீட்டின் நிலையை குடிவரவுத் திணைக்களத்தில் உறுதிப்படுத்தவும் அவர் கேட்டுக் கொண்டார்

செப்டம்பர் 27 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles