காஜாங், செப் 1-
இங்குள்ள தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் 67 ஆம் சுதந்திர தினக் கொண்டாட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
மூவின ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் வண்ணம்
நாட்டுப் பண்னுடன் பள்ளிசிறுவர்கள் முறையே நமதுதேசியக் கொடியையும் அடுத்து சிலாங்கூர் மாநிலப் பண்ணுடன் சிலாங்கூர் கொடியையும் ஏற்றப்பட்டு தேசிய தினக்கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது.
மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் கொண்டுவரப்பட்ட தேசியக் கொடி குடியிருப்பு சங்கத் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டு பிறகு அந்த கொடி பலூன்களுடன் கட்டப்பட்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக வருகை புரிந்திருந்த நாட்டின் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அவர்களின் சிறப்பு அதிகாரி மதிப்புமிகு துவான் அரவின் அப்பளசாமி திருக் கரங்களால் கொடியுடன் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.
.
துவான் அரவிந்த் அப்பளசாமி தமது உரையில் நாம் அனைவரும் இனத்தால், மதத்தால் வேறுபட்டிருந்தாலும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையை மேலோங்கச் செய்து ஒரு தாய் மக்களாக என்றும் மேன்மிகு மலேசியராக திகழ வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தக் கொண்டாட்டத்திற்கு மேலும் சில விருந்தினர்களாக நகரான்மைக் கழக zon 9 சேர்ந்த புவான் சித்தி ரேஸிமி , காஜாங் கிராமத்து இந்தியப் பகுதித் தலைவர் திருமதி தேன்மலர் மற்றும் பல பிரமுகர்கள் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக
மூவின கலாச்சாரத்தை , ஒற்றுமை மாண்புகளை பிரதிபளிக்கும் வகையில் தாரியான் முஹிபா எனும் சீன, மலாய் தமிழ் நடனங்கள் வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது .
மேலும் தற்காப்பு கலையான சிலம்பம், செனி சிலாட் போன்றவை நிகழ்ச்சிக்கு மேலும் மெருகு சேர்த்தது.
சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பண முடிப்பு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
சிறுவர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு மற்றும் தேசிய கொடியுடன் சிறார்களுக்கு வழங்கப்பட்டது.
சுற்று வட்டார மக்கள் சுமார் 250 பேர்கள் கலந்து தங்களது நட்டுப்பற்றை வெளிப்படுத்தி நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.