சுங்கை,செப் 1-
நாட்டின் 67ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு சுங்கை தமிழ்ப்பள்ளியில் நடந்தேறிய சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளாப்பை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் குமாரி சரண்யாவின் தலைமையில் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக கோலாலம்பூரிலிருந்து சுமார் 7 கார்கள் தேசிய கொடி ஏந்தி சுங்கை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நுழைந்தனர்.அவர்களை பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாக வரவேற்ப்பு வழங்கினர்.பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகளும் தேசிய கொடியையும் ரோட்டரி கிளாப் உறுப்பினர்கள் வழங்கினார்கள்.
இப்பள்ளியின் தலைமையாசிரியர் திரி.தியாரன் அவர்களின் தலைமையுரைக்கு பின்னர் சுதந்திர நாளை நினைவுக்கூறுவதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் புறாக்களை பறக்கவிட்ட சரண்யா தனதுரையில் நாம் அனைவருக்கும் இம்மண்ணில் பிறந்து மலேசியர்களாய் வாழ்வதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என கூறினார்.
வேறு எங்கும் இல்லாத நிலையில் நம் நாட்டில் தான் பல்லினமும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வாகவும் வாழ்வதாகவும் ஒவ்வொரு இனமும் அதன் மொழி,கலை,பண்பாடு,சமயம்,பாரம்பாரியம் என அத்தனை தனித்துவ தன்மைகளோடு நனிச் சிறந்த வாழ்வை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்,தலைமுறைகள் கடந்தாலும் நம்மிடையே வலுவாய் ஆழப் பதிந்திருக்கும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் தான் உலகளாவிய நிலையில் ம் இம்மண்ணின் பெருமையை நிலைநிறுத்தி வைத்திருப்பதாக கூறியதோடு பள்ளி மாணவர்களிடையே நாட்டுப் பற்றையும் சுதந்திர உணர்வையும் தொடர்து உயிர்பெற செய்யும் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளையும் ஆசிரியர்களையும் வெகுவாக பாராட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில்,சுற்றுச் சூழல் மீதும் நமது அன்பும் அக்கறையும் இருத்தல் வேண்டும் என நினைவுறுத்திய புக்கில் ஜாலில் ரோட்டரி கிளாப்பினர் பள்ளியின் மூலிகை பூங்காவில் செடிகளையும் நடவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக,சுங்கை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய கொடிகளை ஏந்தி தேசவுணர்வு பாடல்களை பாடியவாறு சுங்கை நகரை வலம் வந்தனர்.மேலும்,ஒவ்வொரு ஆண்டும் இவ்வூர்வலகம் சுங்கை நகர் மக்களால் பெரிதும் ரசிகப்படுவது குறிப்பிடத்தக்கது.