ஈப்போ, செப்.2-
ஐபிஎப் கட்சி கடந்த 32 ஆண்டுகளாக இந்நாட்டில் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அன்று முதல் இன்று வரை இக்கட்சி தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவு வழங்கி வருகிறது. இந்த ஆதரவு என்றென்றும் தொடர்ந்து வழங்கப்படும் என்பது உறுதியான ஒன்றாகும் என்று இங்குள்ள தம்புன் தொகுதியின் ஐபிஎப் கட்சியின் குடும்ப தின விழாவில் கலந்துக்கொண்ட போது பேராக் மாநில ஐபிஎப் கட்சியின் தலைவர் வி.மாணிக்கம் கூறினார்.
தேசிய முன்னணி எத்தகைய பிரச்சினைகள் எதிர்நோக்கிய போதும் , ஐபிஎப் கட்சி சளைக்காமல் இன்னமும் தேசிய முன்னணிக்கு தேர்தல் காலங்களிலும் இதர காலகட்டத்திலும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐபிஎப் கட்சியினர் குறிப்பாக தொகுதிகள் மற்றும் மாநில அளவில் மக்களுக்கு தங்களால் இயன்றளவு சேவைகளை செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் தொகுதிகள் குடும்ப தின விழா கொண்டாட்ட்டத்தை ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் தம்புன் ஐபிப் தொகுதி இந்த குடும்ப தின விழாவில் உரி அடித்தல், வர்ணம் தீட்டும் போட்டி, கோலம் போடுதல், ஆப்பிள் பழம் சாப்பிடுதல் போன்ற விளையாட்டை ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்தகைய விளையாட்டு மற்றும் ஒன்று சேர்ந்து செயல்படும் நிகழ்வுகளின் வாயிலாக இந்திய பாரம்பரிய விளையாட்டுகளின் நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினர் சிம்மோர் மெட்டல் நிறுவன தொழிலதிபர் எஸ்.வாசு மற்றும் மலேசிய ஐபிஎப் கட்சியின் துணைப்பொருளாளரும் பினாங்கு மாநில தலைவருமான டாக்டர் குமரேசன்.
அவருடன் இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த தம்புன் தொகுதி ஐபிஎப் தலைவர் இராஜேந்திரன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.