விஜயலட்சுமி புதையுண்ட இடத்தில்இறுதி சடங்கிற்கு பின்னர் கனத்த இதயத்தோடு தாயகம் புறப்பட்ட குடும்பத்தினர்

கோலாலம்பூர், செப் 2-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில்
நில அமிழ்வில் புதையுண்ட விஜயலட்சுமியைத் தேடி மீட்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் அவரின் குடும்பத்தினர் அவர் புதையுண்ட இடத்தில் இறுதியஞ்சலி செலுத்தினர்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் விஜயலட்சுமியைப் பறிகொடுத்த மகன் சூர்யாவும் அவரின் கணவர் மாதவன் மிகுந்த கனத்த இதயத்தோடு இந்தியா புறப்பட்டனர்.

நேற்று அவர்கள் விஜயலெட்சுமி புதையுண்ட இடத்தில் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.அவர்களுடன் விஜயலட்சுமியின் சகோதரியும் உடன் இருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று புதையுண்டார்அவர் எட்டு மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்து காணாமல் போனார்.

அவரைத் தேடி மீட்கும் பணிகள் 9 நாளாக நடந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles