
கோலாலம்பூர், செப்2-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில்
நில அமிழ்வில் மரணமடைந்த விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.
பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா இன்று இதனை தெரிவித்தார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடைப்பாதை சரிந்து விழுந்த சம்பவத்தில் விஜயலட்சுமி பரிதாபமாக புதையுண்டார்.விஜயலட்சுமியை மீட்கும் பணிகள் கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில் தேடும் பணிகள் சனிக்கிழமை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து விஜயலட்சுமி மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அது முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ஜலேஹா முஸ்தபா தெரிவித்தார்.