புத்ராஜெயா, செப். 3– பொதுச் சேவை சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செப்டம்பர் மிகவும் தீவிரமான சீர்திருத்த நடவடிக்கைகளின் மாதமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
ஏற்கனவே பாராட்டத்தக்கவகையில் உள்ள செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் மற்றும் பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அகமது டஹ்லான் அப்துல் அஜிஸ் ஆகியோருடன் நான் விவாதிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.