கிள்ளான், செப் 3-
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப்பேரவையின் 46 ஆவது திருமுறை விழா கிள்ளான் தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் 31/8/2024 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் காப்பார் வட்டாரப்பேரவையை பிரதிநிதித்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பிரிவு 5 குழுவில் வட்டார மாணவர்கள்(கவிலன் , கவிலா , கவிதேசன் , கணேசன்) இரண்டாவதாக வெற்றி பெற்றனர்.
இரண்டாவதாக பதிகப்பாராயணம் போட்டியில் பிரிவு 2ல் வட்டாரத்தை பிரதிநிதித்து கலந்து கொண்ட மாணவி தாரணிப்பிரியா மாநில நிலையில் முதல் பரிசை வென்றார்.
இவர் சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து பத்துமலை தமிழ்ப்பள்ளியில் 15/9/2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய திருமுறை விழாவில் கலந்து கொள்வார்.
பஞ்சபுராணம் ஓதும் போட்டிப்பிரிவு 2இல் கலந்து கொண்ட மாணவர் செர்வின் மூன்றாவதாக வெற்றி பெற்றார்.
திருமுறை விழாவில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்குக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.