
ஷா ஆலம், செப் 3: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாளும் 1000 அடிகள்,என்ற உடல் நலத்தை மேம்படுத்தும் நடை பயிற்சியை, ஶ்ரீ கெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த சுதந்திர மாதத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அழகை பேணுவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க ஶ்ரீ கெம்பாங்கன் மக்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக ஒரு நாளைக்கு 10,000 கால் அடிகள் எனும் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
RM800 வரையிலான ஷாப்பிங் வவுச்சர்கள் வடிவில் பரிசுகளை வழங்கும் இப்பிரச்சாரம் செப்டம்பர் 30 வரை நடைபெறும் என்று வோங் சியு கி கூறினார்