புத்ரா ஜெயா: செப் 3-
இவ்வாண்டு ஜூன் மாதம் வரை பணியிடங்களில் நிகழும் விபத்துகளுக்கு சமூக பாதுகாப்பு அமைப்பு, Socso மூலம் RM718 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
2023-ஆம் ஆண்டில் பணியிடங்களிலும் நிகழும் விபத்துகளுக்கான திட்டத்தின் கீழ் மொத்த இழப்பீடு RM1.39 பில்லியனைத் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி பணியிடங்களில் இதுவரை 41,278 விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
பணியிடங்களில் நிகழும் விபத்துகளால் இதுவரை 515 பேர் மரணமடைந்துள்ளனர்.
மலேசியாவிலுள்ள சுமார் 10 மில்லியன் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவரது அமைச்சகமும் Socso-வும் கடமைப்பட்டிருப்பதாக ஸ்டிவன் சிம் கூறினார்.