கோலாலம்பூர், செப் 3-
ம.இ.கா தேசிய இளைஞர் பகுதியின் சமயம் மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவராக சகோதரர் முரளி மாரிமுத்து நியமனம் ஆனார்.
இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் கெடா ம.இ.கா ஜெராய் தொகுதியின் இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகிக்கின்றார்.
விளையாட்டு, சமயம் மற்றும் கலாச்சார சார்ந்த பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.
குறிப்பாக திரு.முரளி அவர்கள் காற்பந்து துறையில் தனது பள்ளிப் பருத்திலிருந்தே ஆர்வம் கொண்டவர்.
கெடா மாநில ரீதியில் நிறைய போட்டியில் பங்கேற்றிருக்கிறார்.
முரளி மாரிமுத்து அவர்களின் நியமனத்திற்கு தேசிய ம.இ.கா தலைவர் Tan Sri SA.விக்னேஷ்வரன் அவர்களுக்கும் தேசிய ம.இ.கா இளைஞர் பகுதி தலைவர் திரு.அரவிந் கிருஷ்ணன் அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அரசியலில் ஆர்வமும் பற்றும் உள்ள இளைஞர்களை அரவணைத்து கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி தலைவர் உயர்திரு அரவிந்த கிருஷ்ணன் அவர்களின் அரசியல் பாதையில் நிறைய உருமாற்றமும் தூர நோக்கு சிந்தனைக் கொண்ட இளைஞர்களை காணலாம் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.
அன்புடன்
செப்பூத்தே S.S.இராமமூர்த்தி