![](https://thinathanthi.my/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-09-03-at-15.34.25-1-1024x512.jpg)
சுங்கைபட்டாணி செப் 4-இங்குள்ள தாமான் செஜாத்தி செல்வ விநாயகர் ஆலயத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை வெகு சிறப்பாக கொண்டாட ஆலய நிர்வாகம் தாயார் நிலையில் உள்ளது.
தற்போது ஆலயம் பாலஸ்தாபனத்தின் திருப்பணி மேற்கொண்டு வரும் வேளையில் விநாயகர் சதுர்த்தி அன்று காலை மணி 6 மணி முதல் பக்தர்கள் விநாயர் பெருமானுக்கு பால்குடங்கள் ஏந்தி வந்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தலாம் என ஆலயத்தின் தலைவர் எம்.அரவிந்தன் தெரிவித்தார்.
காலை 9மணிக்கு விநாயப்பெருமானுக்கு சிறப்பு யாகப் பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12மணிக்கு அன்னதானம் வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.