செ.வே.முத்தமிழ்மன்னன்
புக்கிட் ராஜா, செப் 4-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநிலத்தில் சாய் யூத் பெண்கள் கால்பந்து அகாடமி வெற்றிகரமாக உதயமானது.
கடந்த வாரத்தில் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் கே .வி. அன்பா இந்த அகாடமியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து ஆதரவை வழங்கினார்.
புக்கிட் ராஜா தமிழ்ப் பள்ளி திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து கிளப்பின் தலைவரும் மீபா உதவித் தலைவருமான ஸ்ரீ சங்கர் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
மேலும் KLFA தொழில்நுட்ப இயக்குநர் பயிற்சியாளர் சுலைமான் ஹுசின், MIFA சமூக ஊடகத் தலைவர் சஞ்சய் மற்றும் புனிதன் ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
MIFA தலைமை பயிற்சியாளர் கிர்த்தனா அவரது அணிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த முயற்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு வலுவான ஆதரவை மீபா தலைவர் அன்பா வழங்கினார்.
சிலாங்கூரில் உள்ள பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் நம்பமுடியாத ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சாய் யூத் அகாடமியின் பெண்களுக்கான கால்பந்து கிளினிக் மகத்தான வெற்றியைப் பெற்றது.
பயிற்சியை வழிநடத்தும் அனைத்து பயிற்சியாளர்களும் பெண்கள் என்பது ஒரு சிறப்பு சிறப்பம்சமாக உள்ளது.