கோலாலம்பூர் செப் 4-
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி புத்ரா வாணிப மையத்தில் மைபிபிபி கட்சியின் 71 ஆவது தேசிய பேராளர் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மைபிபிபி கட்சியின் 11 ஆவது தேசிய தலைவராக டத்தோ டாக்டர் லோகபாலா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
myPPP Wilayah Persekutuan சார்பாக, myPPP இன் 11ஆவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட YBhg Datuk டாக்டர் லோக பால மோகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
இது உங்களின் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்குக் கிடைத்த தகுதியான அங்கீகாரமாகும்.
உங்களின் விரிவான அனுபவமும் தொலைநோக்கு பார்வையும் சந்தேகத்திற்கு இடமின்றி myPPP கட்சி தொடர்ந்து வெற்றி நடை போடும் .
நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம் என்று சத்தியா சுதாகரன் தெரிவித்துள்ளார்.