
கோலாலம்பூர்: செப் 4-
மலேசிய ஏர்லைன்ஸ் பிரச்சினைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுகிறது என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அஜீசான் (Amir Hamzah Azizan) இங்கு உள்ளார். அவருக்கும் இது தெரியும்.
ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூட்டத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
குறிப்பாக மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை எப்படி பாதுகாப்பது என்பது. அந்த விவாதத்தில் அடங்கும்.
கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற கஸானா நேஷ்னலின் 30ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா