சுங்கைபட்டாணி செப் 4- கடந்த 48 ஆண்டுக்காலமாக பல சமுதாயச் சேவையினை தொடர்ந்து செய்து வரும் சுங்கை பட்டாணி லயன்ஸ் தனது தொண்டூழியத்திற்காக மெது ஓட்ட நிகழ்வினை 21.9.2024 திகதி மாலை மணி 5க்கு சனிக்கிழமை சுங்கைபட்டாணி லென் சாங் கன் தீமோர் தாமான் ஶ்ரீ அஸ்தான வில் உள்ள லிம் கே சீனப்பள்ளி இருந்து தொடங்கவிருக்கிறது.
இந்த மொது ஓட்டத்தில் பங்கு கொள்பவர்கள் நுழைவுக் கட்டணமாக ரிங்கிட் மலேசியா 100 வெள்ளியினை செலுத்தி பாரத்தை பூர்த்தி இதில் அங்கத்த்வம் பெறலாம் என அதன் துணைத்தனர் ஜி.இராமு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு எஸ்.பி.ஸ்டார் தங்கும் விடுதி பெரும் ஆதரவாக இருப்பதுடன் இந்த நிகழ்விற்கு ‘டீ சட்டைகளையும் அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக ராமு தெரிவித்தார்.
அதோடு ஏராளமான நன்கொடை நெஞ்சகர்களும் இந்த நிகழ்விற்கு நன்கொடையினை வழங்கி பெரும் ஆதரவாக இருந்து வருகின்றனர் என்றார்.
சுஙகைபட்டாணி லயன்ஸ் கிளாப் 4 ஆண்டுக்கு ஒரு முறை இந்த மெது ஓட்ட நிகழ்வை தொடர்ந்து செய்து வருவதாகவும் இந்த நிகழ்வின் தலைவராக பாலகிருஷ்ணன்,செயலாளர் சியா கிம் லியோங், பொருளாளர் வேணி,துணைத்தலைவர் கோ.ராமு.முன்னாள் தலைவர் சமுத்தரம் அப்பண்ணா,உதவித்தலைவர் இராஜேந்திரன் முனியாண்டி,மற்றொரு துணைத்தலைவராக துரை சாமி ஆகியோர் இந்த வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி தங்கும் விடுதியின் தலைவர் அலியாஸ்,ஆசிரியர் ரவி இணைந்து இந்த நிகழ்விற்கு உதவிக்கரம் வழங்கி வருவதாக ராமு கூறினார்.