கோலாலம்பூர் செப் 4-
டாக்டர் சிந்துமதியின் மரணம் தற்கொலை அல்ல. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
ஆகையால் மீண்டும் விசாரணையை தொடங்குவதற்கான உத்தரவை ஐஜிபி வழங்க வேண்டும் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் கேட்டுக் கொண்டார்.
டாக்டர் சிந்துமதி கடந்தாண்டு அவரது இல்லத்தில் இறந்து கிடக்க காணப்பட்டார்.
அவரது வாய்க்குள் குப்பை பை உள்ளே திணிக்கப்பட்டுள்ளது. தலை முழுவதும் நெகிழிப் பையால் கட்டப்பட்டிருந்தது.
அப் பைக்குள் மருத்துவ கேஸ் வாயிலாக சுவாசக் குழாய் இணைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தக் கரை இருந்துள்ளது.
இறந்து பல நாட்கள் ஆகிவிட்டதால் அவரின் உடல் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தது.
இப்படி கொடூரமான முறையில் இறந்து கிடந்த டாக்டர் சிந்துமதியின் மரணத்திற்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை.
டாக்டர் சிந்துமதி இறந்து கிடந்த இடத்தில் தடவியல் பரிசோதனை செய்யப்படவில்லை.
அவருடன் சேர்ந்து கிளினிக் வைத்திருந்த பங்குதாரரின் போலிஸ் புகார் பல கேள்விகளை எழுப்புகிறது.
சவப் பரிசோதனை அறிக்கையும் சரியாக இல்லை.
ஆக டாக்டர் சிந்துமதியின் மரணம் ஒரு தற்கொலை அல்ல. இதுவொரு கொலையாக இருக்கலாம் என அவரின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
ஆகையால் இந்த வழக்கை போலிஸார் மீண்டும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.