விளாடிவோஸ்டாக், செப். 4 –
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
இரண்டுநாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு ரஷ்யாவின் தூர
கிழக்கு பிராந்தியத்தின் பெரிய முறைமுக நகரான விளாடிவோஸ்டாக்
வந்தடைந்தார்.
பிரதமர் பயணம் செய்த விமானம் விளாடிவோஸ்டாக் விமான
நிலையத்தை உள்நாட்டு நேரப்படி இன்று காலை 8.33 மணிக்கு
வந்தடைந்தது.
பிரதமரின் இந்தப் பயணத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது
ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு
ஸப்ருள் தெங்கு அஜிஸ், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி, துணை பொருளாதார அமைச்சர் டத்தோ ஹனிபா ஹஜார் தாயிப்,
விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை துணையமைச்சர் டத்தோ
ஆர்தர் ஜோசப் குருப் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
விளாடிவோஸ்டாக் வந்தடைந்த பிரதமர் ரஷ்யாவுக்கான மலேசிய தூதர்
டத்தோ சியோங் லுன் லாய், மூன்றாம் ஆசியத் துறையின் இயக்குநர்
லுட்மிலா வோரோபிவா, பிரிமோர்ஸ்கி பிராந்தியத்தின் துணை கவர்னர்
நாஸ்ட்ராதேங்கோ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நேற்று தொடங்கி எதிர்வரும் 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 9ஆவது
கிழக்கு பொருளாதார ஆய்வரங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர்
இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நாளை 5ஆம் தேதி பிரதமர் இந்த
ஆய்வரங்கின் பிரதான நிகழ்வில் உரையாற்றுவார்.
இந்த பயணத்தின் முத்தாய்ப்பு நிகழ்வாக ரஷ்ய அதிபர் விலாடிமிர்
புடினுடன் பிரதமர் நடத்தவிருக்கும் இரு தரப்புச் சந்திப்பு அமையும்.
இந்த
சந்திப்பின் போது அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்ன பிரிக்ஸில்
மலேசியா இணைவது குறித்து விவாதிக்கப்படும்.
பிரிக்ஸ் அமைப்பின்
தலைவர் பதவியை ரஷ்யா தற்போது வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா