குளுவாங், செப் 5-
நம்பிக்கை கூட்டணி இந்தியர்களை உதாசீனம் செய்வதாக காரணம் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு அந்த கூட்டணியில் இருந்து தாம் வெளியேறியதை மீண்டும் நியாயப் படுத்தி பேசி அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் ஜொகூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ ஓன் ஆபீஸ்யுடன் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் இந்திய தலைவர்கள் இல்லாதது,அந்த கூட்டணி இந்தியர்களை எங்கே வையித்துள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடிகின்றது என்று சந்திரசேகரன் ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.
ஜொகூர் மாநிலத்தில் ஜசெகவின் முக்கிய இந்திய தலைவராக விளங்கிய பிறகு அந்த கூட்டணியின் இருந்து விலகிய தலைவர்களின் ஒருவரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம், மறந்தும்கூட ஒரு இந்திய தலைைர் குளுவாங் மக்கோத்த சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆயத்த ஏற்பட்டில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும் என சுட்டிக் காட்டினார்.
ஜசெக,பிகேஆர் மற்றும் அமானாவைச் கட்சியை சேர்ந்த தலைவர்கள் நடத்திய அந்த சந்திப்பு கூட்டத்தில் ஒர் இந்தியர்கூட இல்லாதது, அங்கே இந்திய சமுதாயத்தின் நிலை என்ன என்று கண்கூடாக காண முடிகின்றது என அந்த முன்னாள் பெக்கோ வாரிசான் சட்டமன்ற வேட்பாளரான திரு சந்திர சேகரன் இங்கே சுட்டிக் காட்டினார்.
எனவே,இந்திய சமுதாயம் அவர்களின் இரட்டை வேடத்தை இனியும் நம்பக்கூடாது என இங்கே இந்திய சமுதாயத்தை வலியுறுத்தி கேட்டு கொள்வதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.