
ஷா ஆலம், செப் 5- ஏரியில் முதலை காணப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) செக்ஷன் 7இல் உள்ள அந்த ஏரிப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு கயிறு தடுப்பு நிறுவியது.
மேலும், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு, அப்பகுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் பிபிடி அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.
“பாதுகாப்பு நடவடிக்கையாகத் தடுப்பு கயிறு நிறுவப்பட்டுள்ளது. எம்பிஎஸ்ஏ அவ்வப்போது நிலைமையை கண்காணிக்கும்.
“சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை, குறிப்பிட்ட ஏரியைச் சுற்றி ஓர் அறிவுறுத்து பதாகையை வைப்பதோடு முதலையை பிடிக்க பொறியை நிறுவும்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.