பந்திங்: செப் 5-
தேர்தலில் இனி பாதுகாப்பான தொகுதிகள் இல்லை. அதனால் யாரும் வெற்றியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று
தோட்டம் மூலப் பொருட்கள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கேட்டுக் கொண்டார்.
தேசிய முன்னணி, அம்னோவுக்கு இந்த நாட்டில் எந்தத் தேர்தலிலும் இனி பாதுகாப்பான இருக்கை என்ற சொல் இல்லை.
இந்த உண்மையை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முன்பு பெற்ற பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் தேர்தல் கேந்திரம் எதையும் சாதாரணமாக எடுத்துக்.கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
அம்னோ கடினமாக உழைக்க வேண்டும்.
மலேசியாவில் இன்றைய அரசியலில் பாதுகாப்பான இருக்கை என்று எதுவும் இல்லை. நம் நாட்டில் அரசியல் சூழ்நிலை மாறி வருகிறது என்று அவர் சொன்னார்.